×

சிங்கப்பூர் புதிய அதிபருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதிகளும் எங்களை பெருமை கொள்ளச் செய்வதோடு, சிங்கப்பூரின் பன்முகத்தன்மையையும் வெளிக்காட்டுகிறது. தங்களது பதவிக்காலம் மிக வெற்றிகரமானதாக அமைந்திட விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சிங்கப்பூர் புதிய அதிபருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,President of Singapore ,Chennai ,M.K.Stalin ,Tharman Shanmugaratnam ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...